1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (23:07 IST)

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்- முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம்

வரும் 2024 ஆம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு   தேசிய அளவில் 3 வது கூட்டணி  உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில்,          பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான பம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார்.
 
இதுகுறித்து பாஜக அல்லாத   மா நில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்தியில் ஆளும் பாஜக இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக நநாம் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.