அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா - தெறிக்க விடும் ரசிகர்கள்

Last Modified வியாழன், 12 ஜூலை 2018 (12:50 IST)
நடிகர் சிவாவை அகில உலக சூப்பர்ஸ்டார் ரேஞ்சிக்கு புகழ் பாடும் ரசிகர்கள் உருவாகியுள்ளது ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

 
நடிகர் சிவாவின் நடிப்பிலும், சி.எஸ்.அமுதன் இயக்கத்திலும் உருவான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்படம் முதல் பாகத்திலேயே ரஜினி, கமல் உள்ளிட்ட பலரையும் ஏகத்துக்கும் கிண்டலடித்தது ரசிகர்களை பெரிதும் கவர, இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
 
சில திரையரங்குகளில் இன்று அதிகாலை 5 மணிக்கே ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு இப்படத்திற்கு வரவேற்பு இருந்தது. 

 
இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நடிகர் சிவாவை ரசிகர்கள் அகில உலக சூப்பர்ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர். தர்மபுரியில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா ரசிகர் மன்றம் என மன்றமே உருவாகி விட்டது. இன்று திரையிடப்பட்ட முதல் காட்சிக்கு ரசிகர் மன்ற மூலமாகவே டிக்கெட் விற்பனை செய்தனர். அப்போது கொடுக்கப்பட்ட டிக்கெட்டில்தான் இப்படி மன்றத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :