1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (14:02 IST)

பிரபல ஹாலிவுட் நடிகர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம்

treat williams
ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் டிரீட் வில்லியம்ஸ் மோட்டார் சைக்கில் விபத்தில் மரணமடைந்தார்.

அமெரிக்காவில் பிரபல நடிகர் டிரீட் வில்லியம்ஸ். இவர், கடந்த 1979 ஆம் ஆண்டு ஹேர் என்ற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படத்திற்காக அவர் கோல்டன் குளோப்  உள்ளிட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதன்பின்னர் ஸ்பீல்பெர்க், தி ஈகிள் ஹாஸ் ஹேஸ்டர், ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவில்  வெர்மாண்டில் மோட்டார் சைக்கிளில்  நடிகர் டிரீட் வில்லியம்ஸ் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று ஒரு கார் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில்,  நடிகர் டிரீட் வில்லியம்ஸ் (71 )படுகாயமடைந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ஹாலிவுட் சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.