1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (14:12 IST)

விஜய்யின் லியோ படத்தில் ஹாலிவுட் நடிகர்?

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட பன்மொழி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் இப்போது ஹாலிவுட் நடிகர் ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நடிகர் டென்சில் ஸ்மித் லியோ படத்தில் ஒரு வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லியோ படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.