1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (18:49 IST)

ரஜினிகாந்தை சந்தித்த பிரபல இயக்குநர்! வைரலாகும் போட்டோ

Maheshbabu Pachikolla- super star rajini
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் மகேஷ்பாபு பச்சிகொல்லா.  இவர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.
 
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு  ரா ரா கிருஷ்ணய்யா என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு அச்சு ராஜமணி இசையமைத்திருந்தார். 
 
இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு ஹாலிவுட் அனிமேசன் படமாக நார்ம் ஆப் தி நார்த் கிஸ் டுதி கிங்டமின் கேமரா மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் பணியாற்றினார். 
 
அதன்பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தை இயக்கினார்.
 
இந்த நிலையில்,  இயக்குனர் மகேஷ்பாபு பச்சிகொல்லா, இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை நேரில் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது  ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்துள்ளார்.    இன்று , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது 171 வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.