1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (06:56 IST)

மீண்டும் செர்பியா சென்ற தக்லைஃப் படக்குழு… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் செர்பியா சென்று அங்கு சில காட்சிகளை படக்குழு படமாக்கி வந்தது. இந்நிலையில் இப்போது மீண்டும் செர்பியா சென்றுள்ள படக்குழு அங்கு முக்கியக் காட்சிகளை படமாக்கி வருகிறது. ஆனால் கமல்ஹாசன் இன்னும் செர்பியா செல்லவில்லை. விரைவில் அவர் இந்தியாவில் இருந்து சென்று படக்குழுவோடு இணைவார் என சொல்லப்படுகிறது.