பாஜகவில் இணையும் பிரபல நடிகை....?
பிரபல நடிகை நக்மா பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்வெளியாகிறது.
தமிழ், இந்தி, உள்ளிட்ட பல மொழி சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. இவர், நடிகை ஜோதிகாவின் சகோதரி ஆவார்.
இவர் காங்கிரஸ் இணைந்த பின் கடந்த 2014 ஆம் ஆண்டு உத்தரபிரததேச மா நிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், தோற்றார்.
பின்னர், காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளராக 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல்வரவுள்ளதால் தன்னை தேர்ந்தெடுக்க கட்சிதலைமை வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்த்த நிலையி நக்மாவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால்,கட்சிக்கு உழைக்கும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஆதங்கப்பட்டார்.இதனால் அவர்,பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.