ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2022 (14:26 IST)

காரில் விளையாடிய 3 குழந்தைகள் பரிதாப பலி

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள லெப்பைக் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் நாகராஜன். இவரது நித்திஷா( 6) என்ற மகளும், நித்திஷ்(4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த  நிலையில்,  நாகராஜ் வீடு அருகில் அவரது உறவினர் சுதன் என்பவரின் மகன் கபிசாந்த் (4) மற்றும்  நித்திஷ் , நித்திஷா ஆகியோர், நாகராஜரின் அண்ணன் மணிகண்டன் கார் நிறுத்தியிருந்ததற்கு அருகில் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின், 3 பேரும் ககருகுள் விளையாடினர்.  அப்போது எதிர்பாராத விதமான கார் கதவு பூட்டியது.

கார் கதவைத் திறக்க முடியாமல் குழந்தைகள் 3 பேரரும் மூச்சுவிடமுடியாமல் சிரமப்பட்டனர்.  இதனால் 3 பேரும் காருக்குள் மயங்கி விழுந்தனர்.  அவர்களை தேடிய பெற்றோர் காரின் கதவைத் திறந்தனர்.அவர்கள் பேச்சு மூச்சின்றி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸில் பணகுடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  ஆனால், 3 குழந்தைகளைப் பரிசோதித்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.