புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (18:21 IST)

மூச்சுத் திணறல் சிகிச்சைக்குப் பின் பிரபல நடிகர் டிஸ்சார்ஜ்...

கடந்த 8 அம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சுத்திணறலால் அவதிபட்டார். இதையடுத்து அவர்  மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சஞ்சய் தத்துக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன் முடிவில் அவருக்கு கொரொனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. இருப்பினும் அடுத்த 2 நாட்கள் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சஞ்சய் தத் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.