பஹத் பாசில் கைது - சொந்த ஜாமீனில் விடுதலை
கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, உடனேயே சொந்த ஜாமீனில் விடுதலையானார் பஹத் பாசில்.
சொகுசு கார் வாங்கி புதுச்சேரியில் பதிவுசெய்து வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலா பால், நடிகர்கள் சுரேஷ் கோபி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் சிக்கினர். அமலா பால், தான் தவறே செய்யவில்லை என்று சாதித்துவரும் நிலையில், சுரேஷ் கோபி மற்றும் பஹத் பாசில் இருவரும் தங்கள் தவறை ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக சுரேஷ் கோபி சில தினங்களுக்கு முன்பு கேரள போலீஸ் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில், நேற்று பஹத் பாசில் ஆஜரானார். அப்போது அவர் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். ‘தான் செய்தது தவறு. அபராதத்தைக் கட்டிவிடுகிறேன்’என பஹத் பாசில் ஒப்புக் கொண்டதால், சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.