திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (22:01 IST)

இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகர்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முன்னோடி இந்தி பிக்பாஸ் என்பது அனைவரும் அறிந்ததே. மொத்தம் பத்து சீசன்கள் அடங்கிய பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் 6வது சீசனில் பங்கேற்ற பங்கேற்பாளர்களில் ஒருவர் போஜ்புரி நடிகரான நிராஹ். வந்த வேகத்தில் இரண்டாவது வாரமே வெளியேறிவிட்ட இந்த நடிகர் சமீபத்தில் தன்னுடைய சில்லறைத்தனத்தை சில்மிஷமாக காண்பித்துள்ளார். 



 
 
திரைப்பட விழா ஒன்றுக்கு லண்டனுக்கு சென்று கொண்டிருந்த நிராஹ், போதையில் விமான பணிப்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளார். மற்ற விமான பணிப்பெண்களும் விமான அதிகாரிகளும் எச்சரித்தும் அவரது சில்மிஷம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
 
இந்த நிலையில் பொறுமை இழந்த அந்த விமான பணிப்பெண் லண்டனில் இறங்கியவுடன் போலீசில் புகார் கூறவுள்ளதாக கூறியவுடன் தான் அடங்கினாராம். போஜ்புரி திரையுலகில் பெரிய நடிகராக இருந்தும் இப்படி சில்லறைத்தனமாக நடந்து கொண்டதை பார்த்து சக பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த விமான பணிப்பெண் மட்டும் புகார் அளித்திருந்தால் ஆயுளில் பாதியை லண்டன் சிறையில் தான் அவர் கழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறது அவரது வட்டாரங்கள். நல்லவேளை பணிப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதால் தப்பித்தார்.