Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரியா கலந்து கொள்வது உறுதி: இதோ ஆதாரம்

priya bhavani" width="600" />
sivalingam| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (23:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி சீரியல் நடிகை ப்ரியா கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர் உள்ளே செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இன்று காலை முதல் செய்திகள் வந்தவண்ணம் இருந்தது


 
 
இந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதியாகிவிட்டது. ப்ரியா தனது டுவிட்டரில் சில நாட்களுக்கு டுவிட்டரில் இருந்து விடை பெறுகிறேன் என்றும், உங்கள் எல்லோருடனும் ஒரு பெரிய மீடியா மூலம் சந்திக்கவுள்ளதாகவும் டுவீட்டை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.
 
செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் அறிமுகமான ப்ரியா 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் விஜய் டிவியில் ஏற்கனவே ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் உள்பட பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். எனவே பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமான ப்ரியா, ஓவியாவுக்கு மாற்றாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :