திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (12:07 IST)

எனிமி படத்தின் டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஆர்யா மற்றும்  விஷால் நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.