5 வருடத்துக்கு ஒரு படம் இயக்கினாலும்… மொய்க்கும் ஹீரோக்கள்!
இயக்குனர் சாந்தகுமாரின் படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.
அவர் இயக்கிய மௌனகுரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றது. அந்த படத்தின் வீச்சு என்னவென்றால் இயக்குனர் முருகதாஸ் அந்த படத்தை இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ரீமேக் செய்யும் அளவுக்கு இருந்தது. ஆனால் அந்த படத்துக்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்தே சாந்தகுமார் மகாமுனி படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை.
என்றாலும் நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். நடிகர்கள் ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் சாந்தகுமாரை அணுகி தங்களுக்கான படத்தை இயக்க சொல்லி கேட்டுள்ளனராம். ஆனால் சாந்தகுமார் வழக்கம் போல பொறுமையாகதான் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபடுகிறாராம்.