வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (17:19 IST)

வருண் தேஜுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள்

வருண் தேஜ் நடித்துவரும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கப் போகின்றனர்

 
 
தெலுங்கு நடிகரான வருண் தேஜ், அடுத்ததாக ஒரு ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். ‘காஸி’ படத்தை இயக்கிய சங்கல்ப் ரெட்டி, இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
இந்தப் படத்தில், ஹீரோயினாக லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் நடித்துவரும் நிலையில், லாவண்யாவும் ஒப்பந்தமாகியுள்ளார். இருவருக்குமே சம முக்கியத்துவம் தரும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.