வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (18:44 IST)

அடுத்து விஜய்யை இயக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா?

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து, அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரி சாமி-2 படத்தை இயக்கியதை அடுத்து விஜய் படத்தை இயக்கபோவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.