புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (08:59 IST)

சேதுவின் மரணம் குறித்து வதந்தி பரப்பாதீர்கள் – நண்பர் ஆதங்கம் !

நேற்று முன் தினம் மறைந்த நடிகரும் மருத்துவருமான சேதுவின் மரணம் குறித்து வதந்திகளைப் பரப்பவேண்டாம் என அவரது மருத்துவ நண்பர் தெரிவித்துள்ளார்.

சந்தானத்தின் நண்பரான சேதுராமன் சென்னையின் பிரபல தோல் மருத்துவராக இருந்தார். இதையடுத்து சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறவே அதற்கடுத்து சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 36. இவரது மரண செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து தங்கள் அஞ்சலியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து நேற்று திரையுலகினர் மற்றும் அவரது நண்பர்கள் கலந்துகொண்ட அவரது இறுதி நிகழ்வு நடந்தது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் சேது கொரொனா தொற்று காரணமாக இறந்ததாக சில செய்திகள் பரவ அதை அவரது மருத்துவ நண்பரான அஸ்வின் மறுத்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நஎன் வாழ்க்கை நிச்சயம் முன்புபோன்று இருக்காது சேது. என் வாழ்க்கையின் வலி மிகுந்த நாள் இது. 30 வருட நட்பு, சகோதரத்துவம். இந்த உலகத்திற்காகவும் இளைஞர்களுக்காகவும் நாம் கொண்டிருந்த திட்டங்கள், இந்த உலகத்தில் நன்மையும், மகிழ்ச்சியும் மட்டும் இருக்க வேண்டும் என எண்ணினோம். நீ செல்லும் போது என்னில் இருந்து ஒரு பகுதியையும் எடுத்து சென்றுவிட்டாய். மக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். அவர் இறந்தது மாரடைப்பால், கொரோனாவால் அல்ல. தயவு செய்து இந்தமாதிரியான நேரத்தில் வதந்திகளைப் பரப்பாதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.