செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (07:36 IST)

கண்ணா லட்டு திண்ண ஆசையா பட ஹீரோ திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி !

கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் மற்றும் தோல் மருத்துவர் சேதுராமன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

சந்தானத்தின் நண்பரான சேதுராமன் சென்னையின் பிரபல தோல் மருத்துவராக இருந்தார். இதையடுத்து சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறவே அதற்கடுத்து சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 36. இவரது மரண செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து தங்கள் அஞ்சலியை வெளிப்படுத்தி வருகின்றனர்.