1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (15:39 IST)

இதெல்லாம் செய்வாரா! தமிழ் ரசிகர்களுக்கு சன்னி லியோன் தரப்போகும் இன்ப அதிர்ச்சி!

பாலிவுட்டில்  எக்குத்தப்பான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சன்னி லியோன். இவரை தமிழ் சினிமாவில் ஒரு பாட்டிலாவது ஆட வைக்க வேண்டும் என முயற்சி செய்யும் தயாரிப்பாளர்கள் ஏராளம். 


 
ஏனெனில் இவர் தான் கூகுளில் அதிகம் தேடப்படும் பிரபலம். இந்நிலையில் தமிழில் சன்னி லியோன் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவரை ஒரு பாடல் பாட வைக்க படக்குழுவினர் விரும்புகிறார்களாம். இதற்காக இசையமைப்பாளர் அம்ரீஸ் சன்னி லியோன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன . சன்னி லியோன் நடிப்பதை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை கவருவதற்காக பாட வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது. ஒருவேளை சன்னி லியோன் சம்மதித்து பாடினால் நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு செம்ம டிரீட் தான்.