1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (23:53 IST)

கிங் ஈஸ் பேக்...தோனியை புகழ்ந்த விராட் கோலி !

சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நேற்றைய போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில் தோனியை விராட் கோலி பாராட்டியுள்ளார்.

 டெல்லிக்கு எதிரன நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 173  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  நிலையில் களமிறங்கியது. இறுதி 19 ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தோனி பந்தை பவுண்டரிக்கு அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதுகுறித்து கேப்டன் விராட், கிங் ஈஸ் பேக் எனப் புகழ்ந்துள்ளார். மேலும் இப்போடியில் சென்னை வெற்றி பெற்றதன் மூலம் தோனி சிறந்த மேட்ச் பினிசர் எனத் தெரிவித்துள்ளார்.