1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:14 IST)

விஜய் டிவியில் மீண்டும் டிடி

சிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார் டிடி.
 
விஜய் டிவியில் பல வருடங்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருகிறார் டிடி. இவர் கடைசியாகத் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ‘அன்புடன் டிடி’. கடந்த வருடமே இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது. அதன்பிறகு எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காத டிடி, சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார்.
 
அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘என்கிட்ட மோதாதே’. விஜய் டிவி சீரியலில் நடிப்பவர்கள் மோதிக் கொள்ளும் நிகழ்ச்சி இது. அதாவது, ஒரு சீரியல் நடிகர்களுடன், இன்னொரு சீரியல் நடிகர்கள் மோதிக் கொள்ளும் விளையாட்டு நிகழ்ச்சி இது. வருகிற சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.