திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (10:13 IST)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய தினகரன், ஸ்டெர்லைட் ஆலையும், கூடங்குளம் அணுமின் நிலையமும் தென்மாவட்ட மக்களை அச்சுறுத்தி வருகிறது எனவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு, அங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். மக்களை பாதிக்கும் எந்த திட்டமும் தமிழகத்திற்கு தேவையில்லை என தினகரன் தெரிவித்தார்.