வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:24 IST)

படத்த ஓடிடியில விக்க அலையணும்… இயக்குனர் வசந்த பாலனின் ஆதங்க பதிவு!

இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய வெயில், அங்காடித் தெரு மற்றும் அரவாண் ஆகிய திரைப்படங்களுக்காக கவனம் பெற்றவர். சமீபத்தில் அவர் இயக்கிய ஜெயில் திரைப்படம் சரியாக போகாத நிலையில் இப்போது அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா ஆகியோர் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தை அவரே தயாரித்திருந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் மூலமாக ஜூலை 21 ஆம் தேதி வெளியிட்டார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அநீதி திரைப்படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பிறகு ப்ரைம் வீடியோ மற்றும் ஆஹா தமிழ் ஆகிய இரண்டு ஓடிடிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது. 

இதையடுத்து அநீதி திரைப்படம் ப்ரைம் வீடியோவில் இந்திய அளவில் டாப் 10-ல் 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அது பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் வசந்தபாலன் ”அநீதி… Top 8 in india… இதுலாம் ஒரு விசயமான்னு திட்டாதீங்க. இங்க ஒரு வாரம் தியேட்டர் கிடைச்சா சந்தோசம். இரண்டாவது வாரம் தியேட்டர் கிடைக்க பெரும் போராட்டம். கதறி அழனும்.... ஆனாலும் முடியாது. அப்பறம் அழுதத தொடச்சுக்கிட்டு படத்தை ஓடிடியில் விற்க ஆபீஸ் ஆபீஸா... சபரிமலை முருகன் கோவில் 5 star ஓட்டல்கள்,பார்கள்னு அலைஞ்சு யார்யாரையோ பாத்து பேசி கடைசியில இங்க வர ஒரு போராட்டம்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஓடுற படம் எடுக்க வேண்டித்தாண்டா நண்பர்கள் திட்டுவது கேட்குது” எனக் கூறியுள்ளார்.