ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (14:02 IST)

நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டுப் போடுவார்களா? சீமான் கேள்வி

RAJKIRAN -SMEENA
இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் சாத்தான்களின் குழந்தைகள் என்று  சீமான் கூறியதற்கு நடிகர் ராஜ்கிரண் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்?  என்று  அவரிடம்  சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான்.  இக்கட்சியின் சார்பில் மணிப்பூரில் குகி பழங்குடி இன மக்களுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து,  சமீபத்தில்   சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமமான், ‘’மணிப்பூரில் இருந்து மக்கள் யாரும் வந்து நமக்கு ஓட்டுப்போவதில்லை, இங்கேயுள்ள கிரிஸ்தவர்களும் நமக்கு ஓட்டளிக்கப் போவதில்லை… கிருஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள்  தேவனின் பிள்ளைகள் என்று  நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகள் ‘’என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு  நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் எச்சரிக்கை விடும் வகையில் ஒரு பதிவு செய்திருந்தார்.

அந்த பதிவில் அவர் கூறியிந்ததாவது:

 
 இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு 
அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,
எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,
அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,
தங்களால் முடிந்த உதவிகளை
பிற சமுதாயத்தினருக்கும்
செய்து கொண்டு, அமைதியாக
வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,
இயலாமையோ, கோழைத்தனமோ,
அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்",
பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர்,
இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் 
பின்பற்றுவதால், 
பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்...

இந்தப்பொறுமையை,
தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட
கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,
அதன் விளைவு மிக மோசமாயிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் என்றைக்காவது போராட்டியது உண்டா? இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி நான் மன்னிப்புக் கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டுப் போடுவார்களா? இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் நடிகர் ராஜ்கிரண்  ஈடுபட்டுள்ளார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.