ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 மே 2021 (08:13 IST)

உதயநிதி & அருள்நிதி இணையும் முதல்படம்… இயக்குனர் யார் தெரியுமா?

இயக்குனர் பாலா உதயநிதியை வைத்து இயக்கும் படத்தில் அருள்நிதியும் நடிக்க உள்ளாராம்.

தேர்தலுக்கு முன்பாகவே இயக்குனர் பாலா உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இப்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மட்டும் நடிக்கவில்லையாம். அவரின் சித்தப்பா மகன் அருள்நிதியும் சேர்ந்து நடிக்க உள்ளாராம். இந்த படத்துக்கான வேலைகளை இப்போது இயக்குனர் பாலா மேற்கொண்டு வருகிறாராம்.

வழக்கமாக அரசியலில் அதிகமாக தலையிடாத பாலா வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னதும் இந்த அடிப்படையில்தான் என சொல்லப்படுகிறது.