ஜீன்ஸ் பேண்ட்டுடன் தமிழக சட்டசபையில் ஒரு எம் எல் ஏ!
தமிழக எம் எல் ஏக்கள் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று சபாநாயகர் முன்னிலையி பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதமாக பதவியேற்றுக்கொண்ட நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம் எல் ஏ உதயநிதி ஸ்டாலின் மட்டும் ஜூன்ஸ் பேண்ட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து பதவியேற்றுக்கொண்டார்.