திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (13:04 IST)

மஞ்சு வாரியருக்குப் பதிலாக நயன்தாரா?

அறிவழகன் இயக்கப்போகும் படத்தில், மஞ்சு வாரியருக்குப் பதில் நயன்தாரா நடிக்கலாம் என்கிறார்கள்.


 

 
‘ஈரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அறிவழகன். க்ரைம் த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட்டான இவரின் சமீபத்திய படமான ‘குற்றம் 23’ சூப்பர் ஹிட்டானது. எனவே, அடுத்த படத்தையும் க்ரைம் த்ரில்லர் பாணியிலேயே எடுக்கப் போகிறார்.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்பட்டது. முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்க உள்ளார். ஆனால், மஞ்சு வாரியருக்குப் பதில் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்கலாம் என்கிறார்கள். படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.