செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (14:38 IST)

தமிழ் படத்தில் அறிமுகமாகும் பிரபல மலையாள முன்னணி நடிகை!

இயக்குனர் ரமணா இயக்கும் படத்தில், அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று செய்தி ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் ஒரு படத்தில் மஞ்சு வாரியார் நடிக்க உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

 
குற்றம் 23 வெற்றிக்குப் பிறகு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் த்ரில்லர் கதை ஒன்றை இயக்குனர் அறிவழகன் தயார்  செய்துள்ளதார். அந்தக் கதையை மஞ்சு வாரியரிடம் சொன்னபோது, அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதால் விரைவில் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படம் தமிழ் - மலையாளம் என இருமொழிகளில் உருவாக்கப்படவுள்ளது என கூறப்படுகிறது. கூடிய விரைவில் மலையாள நடிகை மஞ்சு வாரியரை தமிழ் படத்தில் காணலாம்.