மளமளவென புக் ஆகும் படங்கள்: தனுஷ் காட்டில் பட மழை...

Last Updated: செவ்வாய், 27 நவம்பர் 2018 (21:32 IST)
நடிகைகள், காமெடி நடிகர்கள் என அனைவரும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாவது வழக்கம். ஆனால், நடிகர்கள் பலர் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே கமிட் ஆகின்றனர். 
 
இதற்கு விதிவிளக்காக இருக்கிறார் தனுஷ். ஆம், வட சென்னை படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி உள்ளார். தயாரிப்பாளர் தாணு மட்டுமே தனுஷை வைத்து மூன்று படங்கள் எடுக்க திட்டமிட்டிருக்கிறார். 
 
அதோடு, பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் ராம்குமார் இயக்கும் ஒரு படம், தனுஷே இயக்கும் ஒரு படம் என லிஸ்ட் நீள்கிறது. 
 
ஆனால், இவரது நடைப்பில் படமாக்கப்பட்டுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை. அடுத்த 2 ஆண்டுகள் எப்படியும் தனுஷை அடிக்கடி திரையில் பார்க்க முடியும் போல....


இதில் மேலும் படிக்கவும் :