வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (18:07 IST)

பாதியில் நின்ற தனுஷ் படத்தை கோடிகள் கொட்டி வாங்கிய முன்னணி நிறுவனம்!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனுஷை நாயகனாக வைத்து இயக்கிய படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
நடிகர் தனுஷ் மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம்  பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போகிறது. ஆனால் படத்தில் இடம் பெற்ற சிங்கள் ட்ராக் " மறுவார்த்தை பேசாதே" என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆகியது. படத்தில் இந்த பாடல் மட்டும் இடம்பெறவில்லை என்றால் என்றோ மண்ணுக்குள் புதைந்திருக்கும் இந்த படம்.
 
மிக இளமையான தோற்றத்தில் தனுஷ் இந்த படத்தின் போஸ்டர், பாடலில் தோன்றி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்ததால் தனுஷ் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் உரிமையையே லைகா நிறுவனம் 20 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விரைவில் ஷூட்டிங் முடிந்து படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.