வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (12:45 IST)

வேலை இல்லா பட்டதாரி - 3 விரைவில்.. தனுஷ் அறிவிப்பு

வேலை இல்லா பட்டதாரி படத்தின் மூன்றாம் பாகம் வெளிவரும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.


 

 
தனுஷ், அமலாபால், விவேக் ஆகியோர் நடித்த வேலை இல்லா பட்டதாரி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. இதில், முதல் பாகத்தில் இருந்த பெரும்பாலான நடிகர்கள் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால், வில்லி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக பெரிதாக இல்லையென்றாலும் வசூல் ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது.
 
இப்படத்தின் வெற்றியை படக்குழு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று கொண்டாடியது. அதில் பேசிய நடிகர் தனுஷ் “ என்னுடைய திரையுலக பயணத்தில் விஐபி-2 படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இப்படம் வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் மூன்றாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும். ஆனால், அது எப்போது என எனக்குத் தெரியாது. இதுபற்றி என்னிடம் நிறைய பேர் பேசி வருகிறார்கள்” எனக்  கூறினார். 
 
இது தனுஷ் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.