Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சீரியல் எடுக்கும் தனுஷ்

cauveri manickam| Last Modified சனி, 12 ஆகஸ்ட் 2017 (14:50 IST)
ஆஸ் ஐ யாம் சஃப்பரிங் ஃப்ரம் காதல்’ வெப் சீரியலைப் போல, தனுஷும் ஒரு சீரியல் எடுக்கப் போகிறாராம். 
பாலாஜி மோகன் இயக்கிய ‘ஆஸ் ஐ யாம் சஃப்பரிங் ஃப்ரம் காதல்’ வெப் சீரியல், இளைஞர்களிடையே மிகப் பிரபலமாகி விட்டது. ஆன்ட்ரியா, ரோபோ சங்கர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் கூட இந்த சீரியலில் நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, ‘ஜி ஸ்பாட்’ என்றொரு சீரியல் தயாராகி வருகிறது.

இந்நிலையில், தனுஷும் ஒரு வெப் சீரியல் எடுக்கப் போகிறாராம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தத் திட்டம் இருந்ததாம். இதற்காக ஆராய்ச்சி எல்லாம் செய்து, மொபைல் அப்ளிகேஷன் கூட ரெடி பண்ணும் நிலைக்கு வந்துவிட்டார்களாம். ஆனால், ‘விஐபி 2’ வேலைகள் ஆரம்பமானதால், அதைச் செய்ய முடியவில்லையாம்.

‘விஐபி 2’ ரிலீஸாகி விட்டதால், வெப் சீரியலில் கவனம் செலுத்தப் போகிறார்கள். அனேகமாக, அடுத்த வருடம் இந்த வெப் சீரியல் ஒளிபரப்பாகும் என்கிறார்கள். அந்த சீரியலில் நடிக்கும் எண்ணம், இதுவரை தனுஷுக்கு இல்லையாம். ஒருவேளை அப்போது தோன்றினால் நடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

 


இதில் மேலும் படிக்கவும் :