வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (22:28 IST)

தனுஷ் ஹீரோயினை வளைத்துப்போட்ட ஜீ.வி.பிரகாஷ்

தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயினை, தனக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். 
தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்த ஜீ.வி.பிரகாஷ், ‘ஆடுகளம்’ மற்றும் ‘மயக்கம் என்ன’ படங்களுக்கும்  இசையமைத்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையில் ஏதோ சண்டை வர, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து, நடிக்கும் ‘வடசென்னை’ படத்துக்கு இசையமைப்பதில் இருந்து கலந்து கொண்டார்.
 
இருவரும் இன்னும் சமாதானமாகாத நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி சின்னச்சின்ன உரசல்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் நடிக்கத் தொடங்கியிருக்கும் புதிய படத்தில், ‘அனேகன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அமைரா தஸ்தூர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.