1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2024 (18:12 IST)

காட்டில் ஆபத்தான மிருகம் ஓநாய் தான்.. தனுஷின் ‘ராயன்’ டிரைலர்.!

தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரெய்லர் வீடியோவில் ஆரம்பத்தில் செல்வராகவன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் காட்டிலேயே ஆபத்தான மிருகம் ஓநாய் தான் என்றும் சிங்கம் புலி எல்லாம் வலிமையான மிருகம், ஆனால் ஓநாய்  மட்டுமே ஆபத்தான மிருகம் என்றும் கூறுகிறார்.

ஒத்தைக்கு ஒத்தையாக நின்றால் சிங்கம் ஓநாயை அடித்து விடும், ஆனால் ஓநாய் ஸ்கெட்ச் போட்டால் இந்த சிங்கத்தை வீழ்த்தி விடும் என்றும் செல்வராகவன் வசனம் பேசி உள்ளார். இவனை அடுத்து தனுஷின் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்று இருக்கும் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷின் ஆக்ரோஷமான வசனம், நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவின் ஆவேசமான வில்லத்தனம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பு ஆகியவை இந்த ட்ரெய்லர்கள் இருப்பதை எடுத்து இந்த ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.