செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2024 (17:29 IST)

ஐரா இயக்குனரோடு மீண்டும் இணைகிறாரா நயன்தாரா?

‘லட்சுமி’, ‘மா’ போன்ற சர்ச்சைக்குரிய குறும்படங்களை இயக்கி பிரபலமானவர் சர்ஜுன் கே.எம். இவர் இயக்கத்தில் முதல் முதலில் உருவான படம் ‘எச்சரிக்கை : இது மனிதர்கள் வாழும் இடம்’. இந்தப் படத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், யோகிபாபு ஆகியோர் நடித்தனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் ஐரா என்ற படத்தை இயக்கினார். அந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வெளியான போது படுதோல்வி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜியில் ஒரு படத்தை இயக்கினார்.

அதன் பின்னர் இப்போது அவர் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் கதையை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.