1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (09:25 IST)

ஒரு வருடமாக தனுஷை காக்க வைத்த இயக்குனர் – கடுப்பாகி எடுத்த முடிவு!

நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குனர் ராம்குமார் இயக்க இருந்த திரைப்படம் இப்போது தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் இயக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது.

ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணம் இயக்குனர் ராம்குமார்தானாம். இன்னும் திரைக்கதை பணிகளை அவர் முடிக்காததால் அவருக்காக ஒதுக்கிய தேதிகளை தனுஷ் கார்த்திக் நரேன் படத்துக்கு ஒதுக்கியுள்ளாராம்.