1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (20:49 IST)

ரஜினிகாந்த் படத்தில் தனுஷ் ஹீரோயின்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ் கமிட்டாகியுள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், இன்னும் முடியாமலேயே இருக்கிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி படத்தில் கமிட்டாகியுள்ளார் மேகா ஆகாஷ். ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர்.

இதில், சனந்த் ரெட்டியின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மேகா ஆகாஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் நேற்று டேராடூனில் தொடங்கியிருக்கிறது. ‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் ரஜினிகாந்த்.