ஒரே கேள்வி ; ரஜினி எஸ்கேப் ; கமல்ஹாசன் பதில் - கலாய்க்கும் நெட்டிசன்கள்

Last Modified செவ்வாய், 5 ஜூன் 2018 (11:59 IST)
நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவு குறித்து நடிகர் ரஜினியும் கமல்ஹானும் கூறிய பதில்களை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேட்டியளித்த போது எஸ்.வி.சேகர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்தும் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யவில்லை. மேலும், அவர் போலீசாரின் வாகனத்தில் ஹாயாக செல்லும் புகைப்படங்களும் வெளியாகின. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளிக்க ரஜினி மறுத்துவிட்டார். இதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை எனக்கூறிவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
 
ஆனால், இதே கேள்வி கமல்ஹாசனிடம் எழுப்பப்பட்ட போது “எஸ்.வி.சேகரை கைது செய்யாதது தவறுதான். சட்டத்தின் முன் அனைவரும் சமம். நான் தவறு செய்தால் அதற்கு தண்டனையை அனுபவித்துதான் தீர வேண்டும்” என கமல்ஹாசன் பதிலளித்தார்.
 
இந்நிலையில், இதை ஒப்பிட்டு ஆன்மிக அரசியல் என்பது இதுதான் என பலரும் ரஜினியை கிண்டலடித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :