திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் ஆர்.ஜே.ரமேஷ் திலக்

cauveri manickam| Last Updated: திங்கள், 6 நவம்பர் 2017 (15:58 IST)
அஜித் படமான மங்காத்தா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த, ஆர்.ஜே.ரமேஷ் திலக் தற்போது பல படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.

 
இந்நிலையில் இவர் தான் நடிக்க விரும்பும், கதாபாத்திரம் பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரத்தில் ஒரு சில நடிகர்கள் நடித்திருந்தாலும் சிலர் மட்டுமே நினைவில் நிற்கின்றனர். தான் திருநங்கை வேடத்தில்  நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஏன் என்ற கேள்விக்கு, அவரின் பதில் எனக்கு நன்கு தெரிந்த திருநங்கைகள் சிலர் உள்ளதாகவும், தங்களை மூன்றாம் பாலினம் என அரசு அங்கீகரித்தாலும், வேற்று கிரக வாசிகள்போல் பார்ப்பவர்களும் தங்களை  அசிங்கமாகப் பார்ப்பவர்களும் பலர் உள்ளனர் என்று கூறி வேதனைப்பட்டுள்ளனராம்.
 
இதனால் அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான் என எடுத்துக்கூறும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இவரது நண்பரான விஜய்சேதுபதி ஜூங்கா படத்தில், 'திருநங்கை' வேடமிட்டு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :