ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (11:41 IST)

பிக்பாஸ் ஆர்த்தி ட்வீட்டால் அஜித்தை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தி, விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதி வருகின்றனர். ஆர்த்தி அஜித்தின் தீவிர ரசிகை என்பது அனைவர்க்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக பல்வேறு ட்வீட் மூலம் விஜய்யை  விமர்சித்துள்ளார்.

 
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் விஜய். சமீபத்தில் வெளிவந்த மெர்சல் படம் தமிழ்நாட்டில்  மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் "சுறா படம் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை  ஆகிவிட்டேன்", "அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டமில்லை ஆனால் உங்களை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள்  எங்கனே தெரியல.." என பல்வேறு ட்விட்களில் ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.

 
இந்நிலையில், பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதி வருகின்றனர். ஆர்த்தியின் ட்வீட்டில்  அஜித்தை கலாய்த்தும் ரிப்ளை செய்து வருகின்றனர்.