திருமணம் ஆன பிறகும் நடிக்கலாம் நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுத்த சமந்தா

Last Modified செவ்வாய், 13 நவம்பர் 2018 (12:18 IST)
தமிழ் பெண்ணாக பிறந்து ஆந்திராவிற்கு மருமகளாக சென்றுள்ள நடிகை சமந்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடித்து வரும் சமந்தாவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.
 
தமிழ், தெலுங்கு திரையுலகில் படுபிசியாக இருக்கும் சமந்தா பல  விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமந்தா ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வாங்குகிறார். 
 
திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும் சண்டக்கோழியாக எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்களாம். படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
திருமணமானாலும் மார்க்கெட் பாதிக்காது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார் சமந்தா. தன்னை பார்த்து பிற நடிகைகளுக்கும் நம்பிக்கை வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :