அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டாங்களே! 'தர்பாரும்' காப்பியா?

Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:26 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தின் காப்பி என நீதிமன்றம் வரை பிரச்சனை சென்று அதன்பின்னர் அந்த கதையின் ஒரிஜினல் எழுத்தாளரின் பெயரை படத்தின் டைட்டிலை போட்டது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளியானது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை கடந்த சில மணி நேரமாக ஆய்வு செய்த நெட்டிசன்கள் ஒருவழியாக இது எந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கின் காப்பி என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.

ஆம், அர்னால்ட் நடித்த 'கில்லிங் கந்த்தார்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை போலவே 'தர்பார்' ஃபர்ஸ்ட்லுக்கும் இருப்பதாக தற்போது புகைப்பட ஆதாரத்துடன் கூடிய செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி வருகிறது. நெட்டிசன்களின் இந்த ஆதாரத்திற்கு படக்குழுவினர் என்ன விளக்கம் தரப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கே இந்த ஸ்பீடு என்றால் இன்னும் 'தர்பார்' படத்தின் கதை வெளியே வந்தால் அதுக்கு எத்தனை பேர் சொந்தம் கொண்டாடி வரப்போகின்றார்களோ தெரியவில்லை
இதில் மேலும் படிக்கவும் :