நாளை காலை 8.30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம்

Last Modified திங்கள், 8 ஏப்ரல் 2019 (20:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றாரோ இல்லையோ, வருடம் இரண்டு படங்களில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்த ஆண்டு 'காலா' மற்றும் '2.0' ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி 'பேட்ட' வெளியானது
இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான 'ரஜினி 167' படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான போட்டோஷுட் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 8.30 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 'ரஜினி 167; திரைப்படத்தின் டைட்டில் என்ன என்பது நாளை தெரிந்துவிடும் என்பதல் ரஜினி ரசிகர்கள் இப்போது முதலே கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :