Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எங்கள் நிறுவனம் ஏலம் போகிறதா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிதாலயா

Last Modified செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (12:32 IST)
மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் கவிதாலயா நிறுவனம் ஏலத்திற்கு வந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. இதனை நேற்று ஆங்கில பத்திரிகையில் வந்த விளம்பரம் ஒன்றும் நிரூபித்தது.

ஆனால் இந்த செய்தியை கவிதாலயா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் கையிருப்பு சொத்துக்களை வைத்து புதிதாக லோன் ஒன்றை வாங்க உள்ளதாகவும். அந்த லோன் மூலம் பழைய கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே கவிதாலயா நிறுவனம் ஏலத்திற்கு வரும் செய்தி வெறும் வதந்தியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்பட பல முன்னணி இயக்குனர்களின் பல வெற்றிப்படங்களை கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இதில் மேலும் படிக்கவும் :