வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (15:37 IST)

கொரொனா 3 வது அலை ...அமைச்சர் எச்சரிக்கை

கொரொனா 3 வது அலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரொனா 2 ஆம் அலைக்கு தேர்தல் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. எனவே மிண்டும் அரசியல் நிகழ்ச்சிகளால் 3 ஆம் அலை வந்துவிடக் கூடாது என எச்சரித்துள்ளது.

இன்று காலையில் கொரொனா தடுப்பு முதல்வர் நிவாரண நிதியாக நடிகர் வடிவேலு ரூ. 5 லட்சம் வழங்கினார். அப்போது அவர் ஆட்சிக்கு வந்து ஒரு மாத்திலேயே முதல்வர் ஸ்டாலின் கொரொனாவை கட்டுப்படுத்தியுள்ளார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.