செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (18:24 IST)

பெசன்ட்நகர் மயானத்தில் சித்ரா உடல் தகனம்: சின்னத்திரை கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி

பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
இந்த தற்கொலை குறித்து அவரது கணவர் ஹேமந்த் என்பவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சித்ராவின் பிணத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சித்ராவின் இறுதி ஊர்வலம் சற்று முன் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது என்பதும் தற்போது சில நிமிடங்களுக்கு முன்னர் பெசண்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப் பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன
 
சித்ராவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சின்னத்திரை கலைஞர்கள் கலந்துகொண்டு அவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது