1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (20:27 IST)

சார்மியை போகிலட்சுமியாக்கிய ஜோதிலட்சுமி

நடிகை சார்மியை மீளத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது ஜோதிலட்சுமி படம். பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தின் நாயகி, சார்மி. படத்தில் மட்டுமில்லை, பைனான்ஸிலும். 
 

 
பூரி ஜெகன்நாத் தனது குருநாதர் ராம் கோபால் வர்மாவைப் போல், மாதத்துக்கு ஒரு படம் இயக்க முயன்ற விபத்தின் விளைவு, ஜோதிலட்சுமி. நாயகி மையப்படம். சார்மி நாயகி. கூடவே படத்தை தயாரிக்கவும் செய்தார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்குதான் ரவிக்கையை அவிழ்ப்பது போல் அழைப்பிதழ் தயாரித்து ஆந்திர படவுலகை அதிர வைத்தனர்.
 
திரையரங்கில் ரசிகர்களை திருப்தி செய்ய இந்த ஸ்டண்ட்கள் மட்டும் போதாதே. கடந்த ஜுன் 2 -ஆம் தேதி வெளியான படம் மகத்தான தோல்விக்கு இலக்கணமானது. 
 
நடித்து சம்பாதித்ததை படம் தயாரித்து இழந்துவிட்டேனே என்று கொஞ்சம் தாமதமாக புலம்ப ஆரம்பித்திருக்கிறார் சார்மி.