புஸ்ஸி ஆனந்துக்கு உடல் நலக்குறைவு- மருத்துவமனைக்கு சென்ற விஜய்
புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளார் .
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது.
இப்படத்தின் வெற்றி விழா கடந்த 1 ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில், விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் விவிஐ-க்கள் கலந்து கொண்டனர்.
பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியால விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
எனவே நள்ளிரவில் நடிகர் விஜய் நேரில் சென்று புஸ்ஸி ஆனந்தை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்ததாகத் தகவல் வெளியாகிறது.
புஸ்ஸி ஆனந்த் விரைவில் உடல் நலம் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.