திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2017 (12:51 IST)

அரசியல் சார்ந்த படத்தில் பிந்து மாதவி

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு, சினிமாவில் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் பற்றி  எந்த செய்தி வந்தாலும் பிக்பாஸ் பிரபலம் என்று தான் கூறுகிறார்கள். ஓவியா, சினேகன், ஹரிஷ், ரைசா, ஆரவ்  என பலரும்  படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் நடிகை பிந்து மாதவியும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
கரு. பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தில்தான் நாயகியாக நடிக்க உள்ளாராம். இந்த தகவலை இயக்குனர்  கரு. பழனியப்பன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இது பற்றி பிந்து மாதவி கூறுகையில், 'என்னைத்தேடி  நிறைய வாய்ப்புகள் வந்தாலும், சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதோடு, நடிப்புத்திறமையை  வெளிப்படுத்தும் நல்ல கேரக்டரை எதிர்பார்க்கிறேன். அப்படி அமைந்த படம்தான், புகழேந்தி எனும் நான். இது அரசியல் சார்ந்த  படம் என்றாலும், என் கேரக்டரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதுமே ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து  கதை எழுதும் கரு.பழனியப்பனின் படத்தில், அருள்நிதியுடன் நடிப்பது மகிழ்ச்சி. டிசம்பரில் தொடங்கும் இந்தப் படத்தின்  படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார்.