திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (15:30 IST)

அஜித்துக்கு 300 கட்-அவுட், பேனர்கள் வைத்த ஆர்.கே.சுரேஷ்

ஒருபக்கம் சென்னை உயர்நீதிமன்றம் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள், கட் அவுட்டுக்கள் வைக்க தடை விதித்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் அஜித்துக்காக சுமார் 300 கட்-அவுட் மற்றும் பேனர்களை நடிகர் ஆர்.கே.சுரேஷ் வைத்துள்ளார். ஆனால் இதெல்லாம் அவர் நடித்து வரும் 'பில்லா பாண்டி' என்ற படத்திற்காக என்பது குறிப்பிடதக்கது



 
 
ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் 'பில்லா பாண்டி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தில் தல அஜித் புகழ்பாடும் ஒரு பாடல் உள்ளதாம். எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்' என்று தொடங்கும் இந்த பாடலுக்கு ஆர்.கே.சுரேஷ் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் நடனம் ஆடுகிறார். கல்யான் மாஸ்டர் நடனம் அமைக்கும் இந்த பாடலுக்காக சுமார் 300 அஜித் பேனர்கள், கட் அவுட்டுக்கள் தயாராகியுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சரவணஷக்தி இயக்கி வருகிறார். இளையவன் இசையில் ஜீவன் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.